தேவ சமாதான இன்ப நதியே
135. Like a
river glorious. (272)
1. தேவ சமாதான
இன்ப
நதியே
மா ப்ரவாகமான
வெள்ளம் போலவே,
நிறைவாகப் பாயும்
ஓய்வில்லாமலும்;
ஓட ஆழமாயும்
நித்தம் பெருகும்,
பல்லவி
அருள் நாதர் மீதில்
சார்ந்து சுகிப்போம்
நித்தம் இளைப்பாறல்
பெற்று வாழுவோம்.
2. கையின் நிழலாலே
என்னை மறைத்தார்.
சத்ரு பயத்தாலே
கலங்க விடார்.
சஞ்சலம் வராமல்
அங்கே காக்கிறார்
ஏங்கித் தியங்காமல்
தங்கச் செய்கிறார்.
3. சூர்ய ஜோதியாலே
நிழல் சாயையம்
காணப்பட்டாற்போலே,
துன்பம் துக்கமும்
ஒப்பில்லாப் பேரன்பாம்
சூர்ய சாயையே,
அதால், வாழ்நாள் எல்லாம்,
சோரமாட்டேனே.
Comments
Post a Comment