108. There is
sin in the camp (43)
1. யுத்த சேனையில்
பாதகம் நுழைந்ததே!
என்னில் உண்டோ? என்னில் உண்டோ?
பெரும் தீமையும் தோல்வியும் நேரிட்டதே!
யேசுவே! என்னாலோ?
தேவாசீர்வாதம் வராமல், இதோ!
தடையுண்டாயிற்று தன்னயமோ?
பெருமை பொருளின் மயக்கமோ?
என்னிலே கண்டீரோ?
பல்லவி
என்னில் தானோ? என்னில் தானோ?
என்னிலே கண்டீரோ?
2. அருள் வேதத்தில் மன்னிப்பை வாக்களித்தீர்.
எனக்குண்டோ? எனக்குண்டோ?
நம்பி வந்தவர் யாருக்கும் இரங்குவீர்!
என்னையும் நோக்கீரோ?
பாவ விமோசனம் அருளுவீர்!
நித்திய ஜீவன் கடாட்சஞ் செய்வீர்!
பூரண சுத்தமும் தந்திடுவீர்!
எனக்கும் தாரீரோ?
பல்லவி
தாரீரோ? தாரீரோ?
எனக்கும் தாரீரோ?
3. விசுவாசிக்கு மெய்ச்சமாதான முண்டே,
எனக்குண்டோ? எனக்குண்டோ?
மெய்ப்பக்தரின் சோர்பை நீர் நீக்குவீரே
என்னையும் சேர்க்கீரோ?
ரக்ஷிப்பின் க்ரியையும் முடிந்ததே!
நீச மா பாவியும் வரலாமே!
என்னையும் வருந்தி அழைத்தீரே!
யேசுவே! வந்திட்டேன்.
பல்லவி
ஓடிவந்தேன், ஓடிவந்தேன்.
யேசுவே! வந்திட்டேன்.
No comments:
Post a Comment