18 May 2019

இயேசுவைப் போலச் சகாயஞ் செய்வார்


94.     “There's not a friend like the lowly Jesus.”        (904)

1.         யேசுவைப் போலச் சகாயஞ் செய்வார்
            இல்லையே! இல்லையே!
            ஆத்மாவின் ரோகமும் நோவும் தீர்ப்பார்
            இல்லையே! இல்லையே!

பல்லவி

                        இன்பவாரி! இயேசு ஸ்வாமி
                        அன்பரில் நீர் பேரன்பரே.
                        நல்லோரும் வல்லோரும் உம்மைப்போல
                        இல்லையே! இல்லையே!

2.         மீட்பரைப்போல் மாசில்லாதோ, மேலோர்
            இல்லையே! இல்லையே!
            கிறிஸ்துவைப் போல் மனத்தாழ்மையுள்ளோர்
            இல்லையே! இல்லையே!

3.         யேசுவினாலே வராத இன்பம்
            இல்லையே! இல்லையே!
            ஆண்டவர் நீக்க மாட்டாத இன்பம்
            இல்லையே! இல்லையே!

4.         நாதர் கைவிட்ட மெய்ப்பக்தர் உண்டோ?
            இல்லையே! இல்லையே!
            மீட்கப்படாத மா பாவி உண்டோ?
            இல்லையே! இல்லையே!

5.         யேசுவைப் போலக் கைதாங்குவாரும்
            இல்லையே! இல்லையே!
            மோட்ச பேரின்பம் கடாட்சிப்பாரும்
            இல்லையே! இல்லையே!

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...