சீர்கெட்டோரே நம்பி வாரும்
88. “Come, ye
sinners, poor and needy.”
1. சீர்கெட்டோரே!
நம்பி வாரும்!
யேசு
காத்து நிற்கின்றார்;
காயங்கட்டி, ரோகம் நீக்கி
சொஸ்தமாக்கி ரட்சிப்பார்.
வல்ல நாதர்,
வல்ல நாதர்
அன்பாய் ஏற்றுக்கொள்ளுவார்.
2. திக்கற்றோரே! வாரும்! வாரும்
திவ்ய அன்பை நம்புவீர்;
பச்சாத்தாபம், விசுவாசம்
கொண்டே, வந்து சேருவீர்.
கைம்மாறின்றி,
கைம்மாறின்றி
எல்லாம் பெற்றுக் கொள்ளுவீர்.
3. ஜீவ சாட்சி வாதித்தாலும்,
பின் வாங்காமல் வாருமேன்!
புண்யநாதர் நீதி பேரில்
தாகங்கொண்டு, அண்டுமேன்!
தேவ ஆவி,
தேவ ஆவி
ஆத்ம தாகம் ஈவாரே.
4. பாவப் பாரத்தாலே நொந்து
போன ஏழை மாந்தரே!
சொந்த நீதி என்றும் வேண்டாம்;
காத்திராமல் வாருமே!
சீர் கெட்டோரை,
சீர் கெட்டோரை
மீட்க யேசு வந்தாரே.
5. அன்பின் ரூபி சோலை சென்று
ரத்த வேர்வை சிந்தினார்;
கொல்கொதாவில் பாடுபட்டு,
பாவப் பாரம் தாங்கினார்,
ஆயிற்றென்று,
ஆயிற்றென்று
சத்தமிட்டுக் கூறினார்.
6. வானமேறி, தூய ரத்தம்
காட்டி வேண்டல் செய்கிறார்;
நோக்கிப் பாரும்! நம்பி வாரும்!
சேர்த்துக் கொண்டு வாழ்விப்பார்.
இதற்கென்றே,
இதற்கென்றே
மீட்பராக ஏற்பட்டார்.
Comments
Post a Comment