கைதாங்கி வாரும் ஏழை அடியேனை
128. Hold thou
my hand. (350)
1. கைதாங்கி
வாரும்! ஏழை அடியேனை
உம்மாலேயன்றி நிற்கவேமாட்டேன்;
கைதாங்கி வாரும்! எந்தன் நேசநாதா!
எத்தீங்குக்கும் அப்போது அஞ்சிடேன்.
2. கைதாங்கி வாரும்! அருள் அவதாரி!
மார்போடு அணைத்தன்பு காட்டுவீர்;
கைதாங்கி வாரும்! பாதை தவறாமல்,
காலூன்றி நிற்கத் திடன் செய்குவீர்.
3. கைதாங்கி வாரும்! அருள் ஜோதியின்றி
நான் போகும் பாதை முற்றும்
மறையும்;
என்பேரில் திருமுகத்தின் பிரகாசம்
ஏறெடுப்பீர், பேரொளி உதிக்கும்.
4. கைதாங்கி வாரும்! பூமி இருள் நீங்கி,
பேரின்ப ஜோதி வீச, அடியேன்
இன்னும் உம்மால் கைதாங்கப்பெற்று, நேசா!
விண் வீட்டில் ஏறி வாழ்வையடைவேன்.
Comments
Post a Comment