அருள் ஜோதி தோன்றிடாமல்
81. “Long in
darkness we have waited.” (702)
1. அருள் ஜோதி
தோன்றிடாமல்,
இருள்
மூடிக் கிடந்தோம்;
திக்கில்லாமல், பாவப்பற்றில்
சிக்கிக்கொண்டே யிருந்தோம்.
பல்லவி
வல்ல யேசுகிறிஸ்து நாதா!
நல்ல நேச மீட்பர் நீர்
பற்று, பாசம், கட்டும் முற்றும்
அற்றுப்போகப் பண்ணுவீர்.
2. பக்தி ஒன்றுமில்லை! பாரும்!
சக்தியற்றுப் போயினோம்;
ஜீவபாதையில் நில்லாமல்
தேவசித்தம் மீறினோம்.
3. யேசு நாதரே! இப்போது
நேசமாக நிற்கிறீர்;
'என்னை நம்பு, பாவம் நீக்கி
உன்னைக் காப்பேன்' என்கிறீர்.
4. நம்பி வந்து பாவ நாசா!
உந்தன் பாதம் அண்டினோம்;
தூய ரத்தம் ஓடக்கண்டு,
தீய செய்கை வெறுத்தோம்.
5. பாவச் சேற்றிலே விழாமல்
தேவரீரே காக்கிறீர்.
வல்ல ஆவியாலே என்றும்
வெல்லச் செய்து ரட்சிப்பீர்.
Comments
Post a Comment