18 May 2019

இயேசுவண்டை வாருமேன்


89.     “Come to Jesus, come away.”

1.         யேசுவண்டை வாருமேன்!
            வராமல் தூரம் நிற்பதேன்,
            ஐங்காயம் நோக்கிப் பாருமேன்,
            அன்போடு நிற்கிறார்.

2.         யேசு காத்து நிற்கிறார்.
            கைம்மாறில்லாமல் ரட்சிப்பார்;
            தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுவார்,
            கல்வாரி நாயகர்

3.         யேசு பாவம் போக்குவார்,
            சுத்தாங்கத் தன்மை நல்குவார்,
            எந்நேரமும் காப்பாற்றுவார்,
            ஓர்காலும் கைவிடார்.

4.         யேசுவண்டை இப்போதே
            அஞ்சாமல் கிட்டிச் சேருமே!
            தேவாவி அன்பாய் ஏவவே,
            வந்தண்டிக் கொள்ளுவீர்.

5.         யேசுநாதா! வந்திட்டோம்!
            இப் பாவலோகம் வாஞ்சியோம்
            உம்மண்டை என்றும் தங்குவோம்
            நீர் மா தயாபரர்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...