18 May 2019

எந்தன் ஜீவன் யேசுவே


122.   Take my life, and let it be.               (72)

1.         எந்தன் ஜீவன், யேசுவே!
            சொந்தமாக ஆளுமே!
            எந்தன் காலம், நேரமும்
            நீர் ஆண்டு நடத்தும்.

2.         எந்தன் கை பேரன்பினால்
            ஏவப்படும் எந்தன் கால்
            சேவைசெய்ய விரையும்;
            அழகாக விளங்கும்.

3.         எந்தன் நாவு இன்பமாய்
            உம்மைப் பாடவும், என் வாய்
            மீட்பின் செய்தி கூறவும்
            ஏதுவாக்கியருளும்.

4.         எந்தன் ஆஸ்தி தேவரீர்
            முற்றும் அங்கீகரிப்பீர்
            புத்தி, கல்வி யாவையும்
            சித்தம்போல் ப்ரயோகியும்.

5.         எந்தன் சித்தம் யேசுவே!
            ஒப்புவித்து விட்டேனே;
            எந்தன் நெஞ்சில் தங்குவீர்,
            அதை நித்தம் ஆளுவீர்.

6.         திருப்பாதம் பற்றினேன்;
            எந்தன் நேசம் ஊற்றினேன்;
            என்னையே சமூலமாய்
            தத்தஞ்செய்தேன் உண்மையாய்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...