யேசு நாதர் மாட்சியோடு மீண்டும்


84.     “On that bright and golden morning when the Son of man shall come.”   (159)

1.         யேசு நாதர் மாட்சியோடு மீண்டும் வந்து தோன்றுவார்
            நேச மீட்பர் மாண்பைக் கண்டு பூரிப்போம்;
            நானா திசை நின்று அடியாரைக் கூட்டி வாழ்விப்பார்
            சேனை சேனையாக கூடியே நிற்போம்.

பல்லவி

                   கூடுவோமே! கூடுவோமே!
                        கூடிப்பாடிப் போற்றுவோமே, மீட்பர் சந்நிதானத்தில்
                        கூடுவோமே! கூடுவோமே!
                        பாடிப் போற்றுவோம், பேரின்ப வீட்டினில்.

2.         வாழ்நாள் சென்றபின்பு நித்ரை அடைந்தோர் கெம்பீரமாய்
            ஆழி மண்ணினின்றுயிர்த்துக் கூடுவார்
            தேஜசுள்ள தேகம் பெற்று அம்பரத்தில் இன்பமாய்
            தூய மீட்பரண்டை கூடி வாழுவார்.

3.         பின்பு மின்னும் மோட்ச ஸ்தானம் கண்டு பேரானந்தமாக
            இன்ப ஜீவ ஆற்றின் ஓரம் ஜீவிப்போம்,
            நண்பர், நேசர் உறவோரைச் சந்தித் தேககூட்டமாய்
            விண்ணில் நித்ய காலம் வாழ்ந்து கொள்ளுவோம்.

4.         இன்ப வாழ்வின் நல்ல நாள் இதோ! சமீபமாயிற்றே
            மன்னர் மன்னவன் ப்ரசன்னமாகுவார்.
            தீது, தீமை யாவும் நீங்கி, இந்தப் பூமி எங்குமே
            நீதி சமாதானத்தோடே ஆளுவார்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே