18 May 2019

சமஸ்தம் கிறிஸ்துவே


120.   I am Thine own, O Christ!

1.         சமஸ்தம், கிறிஸ்துவே!
                   ப்ரதிஷ்டை செய்கிறேன்;
            நான் புது ஜீவியம்
                        கண்டடைந்தேன்.

2.         பூலோக இன்பத்தை
                        நாடாமல், உம்மிலே
            ஆனந்தித் துவப்பேன்.
                        என் நேசரே!

3.         ஆனந்தக் களிப்பாய்ச்
                        சங்கீதம் பாடுவேன்
            என் தயா நிதியைக்
                        கொண்டாடுவேன்.

4.         என் நெஞ்சை, ரக்ஷகா!
                        நீர் வசமாக்கினீர்,
            நீங்காப் பேரின்பத்தைக்
                        கடாட்சித்தீர்.

5.         பேரன்பின் கடலில்
                        நான் மூழ்கிக் களிப்பேன்;
            மெய் இளைப்பாறுதல்
                        கண்டுணர்ந்தேன்.

6.         என் செய்கை சிந்தனை
                        சுத்தாங்க மாகவும்
            சுகந்தம் வீசவும்
                        செய்தருளும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...