தேவாவி மனவாசராய்


142.   Spirit Divine! attend our prayers.               (181)

1.         தேவாவி! மனவாசராய்
            வந்தனல் மூட்டுவீர்,
            உம் அடியாரின் உள்ளத்தில்
            மா க்ரியை செய்குவீர்.

2.         நீர் ஜோதி போல் ப்ரகாசித்து
            நிர்ப்பந்த ஸ்திதியும்
            என் கேடும் காட்டி, ஜீவனாம்
            மெய்ப்பாதை காண்பியும்.

3.         நீர் வான அக்னி போலவே
            துர் ஆசை சிந்தையும்
            தீக்குணமும் சுட்டெரிப்பீர்,
            பொல்லாத செய்கையும்.

4.         நற்பனி போலும், இறங்கும்
            இவ்வேற்ற நேரத்தில்
            செழிப்புண்டாகச் செய்திடும்,
            பாழான நிலத்தில்.

5.         புறாவைப்போலச் சாந்தமாய்
            நீர் செட்டை விரிப்பீர்.
            மெய்ச் சமாதானம், ஆறுதல்
            நற்சீரும், அருள்வீர்.

6.         நீர் பெருங்காற்றைப் போலவும்
            வந்தசைந்தருளும்.
            கல்நெஞ்சை மாற்றி பேரன்பை
            நன்குணரச் செய்யும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே