30 May 2019

அன்பர்க்கருள் புரிவோனை

அனுபந்தம்:6

To Download Txt Lyrics file

 

6. (65)                   கல்வாரி மலைதனில் கண்டேன்

 

தேவகாந்தாரி                                                ரூபகதாளம்

 

                             தேவாரம்

 

1.       அன்பர்க்கருள் புரிவோனை, ஆதியாய் நின்ற சீமானை,

            துன்பமகற்றிடுங் கோனை, தூயமனமுளத்தானை,

            பொன் பொலியும் பெருமானை, பூரண நேசமுற்றானை,

            இன்பமளித்திடுந்தேனை, இலங்குந்திருமேனி கண்டேன்;

                        கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.

 

2.         சத்தியவாசகப்போதன், சாற்று முரைப்பிடிவாதன்,

            பத்திசேர் சற்பிரசாதன், பாவமகற்றும் பொற்பாதன்,

            எத்திசையோர் தேடும் நாதன், இந்நிலம் வந்தமா நீதன்,

            முத்தியளித்திடு வேதன், மூவாதிருமேனி கண்டேன்;

                        கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.

 

3.         பாவமகற்று பகாரன், பசாசுகளுக்கபகாரன்,

            ஜீவனளிக்கும் உதாரன், தீவினைபோக்குங் குமாரன்,

            சாவையழித்தமாவீரன், தாரணியோர்க்குபகாரன்,

            தேவ சுரரேத்துந்தீரன், சோதி திருமேனி கண்டேன்;

                        கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.

 

4.         ஆதியும் அந்தமுமான, அல்பா ஒமேகாவுமான,

            நீதி இரக்கமுமான, நித்திய ஜீவனுமான,

            ஓதிய வேதமுமான, உத்தம மார்க்கமுமான,

            மேதினியிலுருவான மீட்பர் திருமேனி கண்டேன்;

                        கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.

 

 

- சா.ப.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...