18 May 2019

தயாபரா காத்தருளும்


127.   Lord Jesus? Thou dost keep thy Child        (202)

1.         தயாபரா! காத்தருளும்,
            என் சுகதுக்கம் யாவிலும்
                        சகாயஞ் செய்குவீர்.
            என் நேச வல்லாக்ஷகா!
            ஆருயிர் தந்த நாயகா!
                        பேரன்பைக் காட்டினீர்.

2.         அன்பின் சொரூபி! யேசுவே!
            சங்கீதம் பாடி உம்மையே
                        எப்போதும் போற்றுவேன்;
            மா அருள் செல்வம் அளித்தீர்;
            கடாட்சம் வைத்துக் காக்கிறீர்;
                        உம் சொந்தமாயினேன்.

3.         மெய் வேத வாக்கைச் சாருவேன்,
            நான் முற்றும் உம்மை நம்புவேன்,
                        கைதாங்கிக் காருமே!
            உம்மாலே வெற்றி சிறப்பேன்,
            ஆனந்தக் களிப்படைவேன்,
                        புகழ்ச்சி உமக்கே!

4.         ஆரம்பமான க்ரியையை
            நீர் பூரணமாக்கிப் பாவத்தை
                        நிர்மூலம் பண்ணுவீர்;
            எப்பாடுமின்றி இன்பமும்,
            என்குறை நீங்க நிறைவும்
                        ஈந்தாசீர்வதிப்பீர்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...