முந்தி யேசுநாதர் நின்று


112.   Oh, the bitter shame and sorrow,              (53)

1.       முந்தி யேசுநாதர் நின்று
                      நேசத்தோடழைத்துமே.
            திவ்ய அன்பை வாஞ்சியாமல்,
            அகங்காரங்காட்டி, “எல்லாம்
                        என்னால் ஆகும்“ என்றேனே.

பல்லவி

                        “என்னால் ஆகும்” என்றேனே.

2.         கைவிடாத மீட்பர் ரத்தம்,
                        காயமும் நான் கண்டனன்.
            சாவின் காட்சியாலே சற்று
            ஆவல்கொண்டு “கொஞ்சமேனும்
            உம்மால் ஆகும்” என்றனன்.

பல்லவி

                        “உம்மால் ஆகும்” என்றனன்.

3.         மேலும் மேலும் துணை நின்று
                        என்னைத்தாங்கி வந்தாரே
            எந்தன் கர்வம் நீங்கி, மீட்பர்
            பாதம் அண்டி, “மிக்க நன்மை
            உம்மால் ஆகும்” என்றேனே.

பல்லவி

                        “உம்மால் ஆகும்” என்றனன்.

4.         நேசநாதா! வெற்றிகொண்டீர்!
                        அன்பின் ஆழம் நீளமும்
            கண்டு, என்னை ஒப்புவித்து
            முற்றும் உந்தன் மீதில் சார்ந்தேன்,
                        “உம்மால் ஆகும் சர்வமும்”.

பல்லவி

                        “உம்மால் ஆகும் சர்வமும்”

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு