30 May 2019

உலகும் வானும் செய்தாளும்


29. (33T)     

சங்கராபரணம்            விசுவாசப் பிரமாணம்        ஏகதாளம்

1.         உலகும் வானும் செய்தாளும்
            ஒப்பில் சர்வ வல்லவராய்
            இலகும் அருளும் தந்தையாம்
            எம்பிரான் றனை நம்புகிறேன்.

2.         அவர் ஒரு வேறா மைந்தனுமாய்
            ஆதி முதல் எங் கர்த்தனுமாய்த்
            தவறில் யேசுக் கிறிஸ்துவையும்
            சந்ததமே யான் நம்புகிறேன்.

3.         பரிசுத்தாவி அருளதனால்
            படி மேல் கன்னி மரியிடமாய்
            உருவாய் நரர் அவதாரமாய்
            உதித்தார் எனவும் நம்புகிறேன்.

4.         பொந்து பிலாத்ததிபதி நாளில்
            புகலரு பாடுகளை யேற்று,
            உந்தும் சிலுவையிலறையுண்டு
            உயிர் விட்டாரென நம்புகிறேன்.

5.         இறந்தே அடங்கிப் பாதாளம்
            இறங்கி மூன்றாம் தினமதிலே
            இறந்தோரிடம் நின்றே உயிரோ
            டெழுந்தா ரெனவும் நம்புகிறேன்.

6.         சந்தத மோட்சம் எழுந்தருளிச்
            சர்வ வல்ல பரனான
            எந்தை தன் வல பாரிசமே
            இருக்கின்றாரென நம்புகிறேன்.

7.         உயிருள்ளோரை மரித்தோரை
            உத்தம நியாயந்தீர்த்திடவே,
            ஜெயமாய்த்திரும்ப வருவாரெனச்
            சிந்தையார நம்புகிறேன்.

8.         பரிசுத்தாவியை நம்புகிறேன்,
            பரிசுத்தமா பொதுச்சபையும்,
            பரிசுத்தர்களின் ஐக்கியமும்,
            பரிவாய் உண்டென நம்புகிறேன்.

9.         பாவ மன்னிப்புள தெனவும்,
            மரித்தோர் உயிர்த்தெழுவா ரெனவும்,
            ஓவா நித்திய ஜீவனுமே
            உளதெனவும் யான் நம்புகிறேன்.

- ஜ. ச. வே.


No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...