ஒன்று மில்லாமல் உந்தன்
111. Oh! to be
nothing, nothing (325)
1. ஒன்று மில்லாமல்,
உந்தன்
பாதத்திலே
விழுந்தேன்,
நான் வெறுமையான பாத்ரம்
உபயோகஞ் செய்யுமேன்,
கறையும், குறையும் நீக்கி
நீர் துப்புர வாக்கிடுவீர்,
வெறுமையானது! பாரும்!
பேரருளால் நிரப்புவீர்.
பல்லவி
ஒன்றும் இல்லாமல், உந்தன்
பாதத்திலே விழுந்தேன்,
நான் வெறுமையான பாத்ரம்
உபயோகஞ் செய்யுமேன்.
2. ஒன்று மில்லாமல், வந்து
வாசலில் காத்திருப்பேன்;
ஓர் அடிமைபோல் நின்று
பணிவிடையும் செய்குவேன்;
எந்தனைக் கருவியாக
எந்நேரமும் கையாடுவீர்,
வேலை கொடாமற் போனாலும்
நான் பணிந்து நிற்கச் செய்வீர்.
3. ஒன்றுமில்லாமையாலே
தூசியில் தாழுகிறேன்;
நான் சிறுகியே போனாலும்
திரு நாமத்தைப் போற்றுவேன்;
யேசுவை உயர்த்திக் காட்டி
ப்ரஸ்தாபித்து அறிவிப்பேன்;
யேசுவின் அன்பை அல்லாமல்
வேறொன்றையும் அறிந்திலேன்.
Comments
Post a Comment