18 May 2019

என் ரக்ஷகா நீர் என்னிலே


115.   O, Jesus Christ! grow Thou in me.    (313)

1.         என் ரக்ஷகா! நீர் என்னிலே
                        மேன்மேலும் விளங்கும்;
            பொல்லாத சிந்தை நீங்கவே
                        சகாயம் புரியும்.

2.         என் பலவீனம் தாங்குவீர்
                        மாவல்ல கரத்தால்.
            சாவிருள் யாவும் நீக்குவீர்
                        மெய் ஜீவன், ஜோதியால்,

3.         துராசாபாசம் நீங்கிடும்
                        உம்தன் ப்ரகாசத்தால்
            சுத்தாங்க குணம் பிறக்கும்,
                        நல்லாவி அருளால்.

4.         மாசற்ற திவ்ய சாயலை
                        உண்டாக்கியருளும்;
            என்னில் தெய்வீக மகிமை
                        மேன்மேலும் காண்பியும்.

5.         சந்தோஷிப்பித்துத் தாங்குவீர்,
                        ஒப்பற்ற பலத்தால்;
            என் நெஞ்சில் அனல் மூட்டுவீர்
                        பேரன்பின் ஸ்வாலையால்.

6.         நீர் பெருக நான் சிறுக
                        ஆட்கொண்டு நடத்தும்;
            மெய் பக்தியில் நான் வளர;
                        காடாட்சித்தருளும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...