18 May 2019

ஆராய்ந்து பாரும் கர்த்தரே

சு.கீ:107

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

107.   Search me, O God         (22)

 

1.       ஆராய்ந்து பாரும், கர்த்தரே;

            என் க்ரீயை யாவையும்;

            நீர் காணுமாறு காணவே

            என்னில் பிரகாசியும்.

 

2.         ஆராயும்! எந்தன் உள்ளத்தை

            நீர் சோதித்தறிவீர்;

            என் அந்தரங்க பாவத்தை

            மா தெளிவாக்குவீர்.

 

3.         ஆராயும் திவ்ய ஒளியால்,

            துர்ராசை தோன்றவும்,

            மெய் மனஸ்தாபம் அதனால்

            உண்டாக்கியருளும்.

 

4.         ஆராயும் சிந்தை, யோசனை,

            எத்தீய நோக்கமும்,

            அசுத்த மனோபாவனை

            உள்ளிந்த்ரியங்களும்.

 

5.         ஆராயும் மறைவிடத்தை

            மா தூய கண்ணினால்;

            அரோசிப்பேன் என் பாவத்தை

            தேவானுக்ரகத்தால்.

 

6.         இவ்வாறு நீர் ஆராய்கையில்,

            சாஷ்டாங்கம் பண்ணுவேன்,

            உம்சரணார விந்தத்தில்

            சுத்தாங்கம் தேடுவேன்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...