18 May 2019

வா இளைப்பாறல் தருவேன்


114.   My Saviour! Thou hast offered rest

1.         வா! இளைப்பாறல் தருவேன்
                      என்றென்னைக் கூப்பிட்டீர்;
            என் சொந்த க்ரியை இன்றியே
                        மெய்ப்பாக்யம் நல்குவீர்.

2.         ஆங்காரம், சுயஸ்நேகமும்
                        மேலிட்டு வந்ததால்
            ஓய்வடையாமல், மருண்டேன்
                        அவிசுவாசத்தால்.

3.         'நான்' என்ற அங்காரத்தால்
                        வீணாக முயன்றேன்!
            இவ்வாத்ம இளைப்பாறலைப்
                        பெறாமற் போயினேன்.

4.         உம் திவ்ய சமாதானத்தை
                        நீர் தாரும், ரக்ஷகா!
            என் ஆவி தேகம் யாவையும்
                        வந்தாளும், நாயகா!

5.         மாவல்ல கையில் எந்தனை
                        நான் ஒப்புவிக்கிறேன்;
            உம் திருச் சித்தப்படியே
                        ஆட்கொண்டு வாருமேன்.

6.         பேரின்பம் காணும் அளவும்
                        நீர் ஆண்டு நடத்தும்;
            உம் அருள் சாயல் எந்தனில்
                        உண்டாக்கியருளும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...