உந்தன் சொந்த மாக்கினீர்


124.   Thine for ever - God of love  (74)

1.         உந்தன் சொந்த மாக்கினீர்
            அடியேனை நோக்குவீர்,
            என்றும் தீங்கில்லாமலே
            பாதுகாரும், யேசுவே!

2.         நான் உம் சொந்தம்! லோகத்தில்
            மோட்ச யாத்ரை செய்கையில்,
            ஜீவன், சத்யம், வழி நீர்;
            நீரே ரட்சித்தாளுவீர்.

3.         நான் உம் சொந்தம்! ரட்சிப்பும்
            மட்டில்லாத பாக்யமும்
            அருள் நாதா நல்கினீர்;
            இன்னமும் காப்பாற்றுவீர்.

4.         நான் உம் சொந்தம்! நித்தமாய்
            ஏழையேனைச் சுகமாய்த்
            தங்கச்செய்து மேய்ப்பரே!
            காத்தும் மேய்த்தும் வாருமே.

5.         நான் உம் சொந்தம்! தேவரீர்
            வழி காட்டிப் போஷிப்பீர்
            பாவம் நீங்க கழுவும்!
            ஆயுள் முற்றும் நடத்தும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு