இயேசுவை நாம் நோக்கி


137.   Looking unto Jesus                 (222)

1.         யேசுவை நாம் நோக்கி
            முன்னே செல்லுவோம்
            விசுவாசம் கொண்டு
            வெற்றி சிறப்போம்.
            ரக்ஷிப்பின் பதாகை
            ஏற்றிக்காட்டுவோம்
            லோகம் பாவம் பேரில்
            ஜெயம் கொள்ளுவோம்.

பல்லவி

                        யேசுவை நாம் நோக்கி
                        முன்னே செல்லுவோம்,
                        விசுவாசங்கொண்டு
                        வெற்றி சிறப்போம்.

2.         யேசுவை நாம் நோக்கி,
            சென்று போகையில்
            கால்கள் இடறாமல்
            மோட்ச பாதையில்,
            மோசமும் வராமல்,
            நிலை பெறுவோம்.
            கண்ணியில் சிக்காமல்
            நடந்தேகுவோம்.

3.         யேசுவை நாம் நோக்கி,
            அன்பின் ஆழமும்
            கிருபா கடாட்சம்
            அருள் செல்வமும்
            பேரானந்தமாகக்
            கண்டு களிப்போம்
            இன்னும் வாஞ்சையோடே
            முன்னே செல்லுவோம்.

4.         யேசுவை நாம் நோக்கி
            அவர் வானத்தில்
            பெற்ற திவ்ய மாண்பை
            சிந்தை செய்கையில்,
            விசுவாசத்தாலே
            பரம் ஏறுவோம்,
            யேசுவோடு கூட
            வாசம் பண்ணுவோம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு