இயேசுவண்டை வந்தால் அவர்


101.   “Tis th' promise' of God' full salvation to give.”          (841)

1.       யேசுவண்டை வந்தால் அவர் ஏற்றுக்கொள்வார்;
          ரட்சிப்பேனென்று வல்ல மெய் வாக்களித்தார்.

பல்லவி

                      மீட்பரண்டை வந்தேன்; விசுவாசியானேன்;
                        திருரத்தத்தால் ரட்சிப்பைப் பெற்றுக்கொண்டேன்.
                        அல்லேலூயா வந்தேன்; விசுவாசியானேன்
                        திருரத்தத்தால் ரட்சிப்பைப் பெற்றுக்கொண்டேன்.

2.         பெருஞ் சோதனைகள் வந்து நெருங்கினும்
            யேசுநாதரின் வல்லமை வெல்லச்செய்யும்,

3.         இஷ்டர் ஸ்நேகிதரும் மோட்சலோகஞ் சென்றார்
            இன்ப வாரியில் மூழ்கிக் கொண்டாடுகிறார்.

4.         விண் வீட்டிலே பாலரும் பாடுகிறார்;
            ராஜா கீதத்தைக் கேட்டுச் சந்தோஷிக்கிறார்,
           
5.         தீர்க்கர் ராஜாக்களும் வானலோகத்தில், பார்!
            பாடிக்கொண்டே பொன் வீதியில் செல்லுகிறார்.

6.         நாமும் பேரின்பத்தில் பங்கு பெற்றுக்கொள்வோம்,
            என்றும் மீட்பவரைப் போற்றியே ஸ்தோத்திரிப்போம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு