கல்வாரியை நோக்கும் எப்பாவியையும்


97.     “Whoever receiveth the Crucified one.”   (400)

1.         கல்வாரியை நோக்கும் எப்பாவியையும்
            தம்மண்டையில் சேருவார் யாவரையும்
            ரட்சாபெருமான் ஏற்றுக்கொள்கிறார்;
            எல்லோரையும் ரட்சிக்க வல்லோரானார்.

பல்லவி

                        மா பாவி உன் ரட்சகர் அழைக்கிறார்
                        தம் ஜீவனை விட்டுன்னை மீட்டுக்கொண்டார்
                        கைமாறு வாங்காமல் கடாட்சஞ்செய்வார்
                        எல்லோரையும் ரட்சிக்க வல்லோரானார்.

2.         நற்செய்தியை நம்பும் எம்மாந்தரையும்
            கல்வாரியின் ரத்தத்தைச் சார்ந்தோரையும்
            அன்போடு கடாட்சித்துச் சேர்த்துக்கொள்வார்
            எல்லோரையும் ரட்சிக்க வல்லோரானார்.

3.         மெய்யாய் மனம் மாறி எப்பாவத்தையும்
            விட்டோடித் தன் நெஞ்சத்தில் மீட்பரையும்
            ஏற்றுக்கொள்ளும் நீசனை ஈடேற்றுவார்
            எல்லோரையும் ரட்சிக்கச் சித்தங் கொண்டார்.

(The first bar of each line should be played uniformly in quavers, both in hymns and chorus)


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு