18 May 2019

புத்திக்கடங்காத வல்ல


140.   Holy Father! Thou hast spoken         (164)

1.         புத்திக்கடங்காத வல்ல
            வாக்கை இப்போ துரைத்தீர்
            திரள் அருள் செல்வம், நல்ல
            பிதாவே! நீர் காட்டினீர்.

2.         திருவாக்கினால் சந்தேகம்
            நீக்கி விசுவாசமும்
            ஸ்திரமாக்கி, அபிஷேகம்
            ஆவியாலே அருளும்.

3.         சுய சக்தியே யில்லாமல்
            திருப்பாதம் அண்டினேன்.
            வேறே நன்மை விரும்பாமல்,
            உம்தன் ஈவைப் பெறுவேன்.

4.         ஏற்றுக்கொள்ளும்! தயவாக
            முற்றும் சுத்திகரிப்பீர்.
            ஆவியாலே நிறைவாக
            அபிஷேகம் பண்ணுவீர்.

5.         ஆவியின் மா ஞானஸ்நானம்
            புத்திக்கு எட்டாததே!
            ஆயினும் இவ்வருள் தானம்
            எந்தன் நெஞ்சில் ஊற்றுமே.

6.         ராஜா உபயோகஞ் செய்யும்       
            சுத்த பாத்ர மாக்குவீர்.
            நித்ய ஜீவ ஊற்றிலேயும்
            நிரம்ப நீர் செய்குவீர்.

7.         யேசுவே! நீர் வாசராக
            வாரும் எந்தன் உள்ளத்தில்,
            ஆவியாலே தயவாக
            நிரப்பும் இந்நேரத்தில்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...