18 May 2019

கர்த்தாவே எதுமட்டும் வராமல்


144.   How long O Lord, our Saviour (378), (87)

1.         கர்த்தாவே! எதுமட்டும்
            வராமல் இருப்பீர்?
            மெய்ப்பக்தரின் ஆயாசம்
            நீர் நன்றாய் அறிவீர்.

2.         மா ஜோதி அருணோதயம்
            எந்நேரம் உதிக்கும்?
            மெய் வாழ்வின் சுபதினம்
            எப்போது விடியும்?

3.         தாசர் அநேகர் தூங்கி
            வீண்காலம் கழிப்பார்.
            நீர் தோன்ற சிலர் மட்டும்
            காத்தெதிர்ப் பார்க்கிறார்.

4.         வராமல், எதுமட்டும்,
            மா மணவாளனே,
            தாமதிப்பீர்? அநேகர்
            நம்மால் போனாரே!

5.         நல் மணவாட்டி தானும்
            மெய்வாழ்வை மறந்தாள்;
            தன்நாயகர் இல்லாமல்
            சந்தோஷம் ஆகின்றாள்.

6.         ஆ! தாசர் தூக்கம் விட
            நீர் தட்டி எழுப்பும்
            நீர் வர ஆவலோடே
            காத்திருக்கச் செய்யும்.

7.         எல்லாரும் அரைகட்டி
            தம்தீபம் ஏற்றவும்,
            கர்த்தாவே, தயவாக
            நீர் ஏவியருளும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...