மெய்ப் பக்தர் தாசரே


92.     “Come ye that love the Lord” (823)

1.         மெய்ப் பக்தர், தாசரே!
            கொண்டாடக் கூடுவோம்.
            சந்தோஷ கீதம் பாடியே,
            சந்தோஷ கீதம் பாடியே
            கர்த்தாவைப் போற்றுவோம்;
            கர்த்தாவைப் போற்றுவோம்.

பல்லவி

                        மா உன்னத சீயோன்,
                        சோபித சுந்தர சீயோன்,
                        மகா உன்னத திவ்விய சீயோன்
                        நாம் நோக்கியே செல்லுகிறோம்.

2.         ரட்சண்யக் கூட்டத்தார்
            பேரீவுக்காகவே
            மேன்மேலும் நன்றி சொல்லுவார்,
            மேன்மேலும் நன்றி சொல்லுவார்;
                        பாடாமல் தீராதே!
                        பாடாமல் தீராதே!

3.         பேரன்பின் வாரியில்
            நாம் மூழ்கி ஆழ்கிறோம்;
            பின், மோட்சானந்த வீட்டினில்,
            பின், மோட்சானந்த வீட்டினில்,
                        ஒன்றாகப் பூரிப்போம்;
                        ஒன்றாகப் பூரிப்போம்.

4.         விசாரம் துக்கத்தை
            விட்டார வாரிப்போம்;
            இம்மானுவேலின் தேசத்தை,
            இம்மானுவேலின் தேசத்தை
                        நாம் நாடிப் போகிறோம்,
                        நாம் நாடிப் போகிறோம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு