இடையில் ஒன்றும் நில்லாமல் உம்
109. Nothing
between, Lord-Nothing between! (42)
1. இடையில் ஒன்றும்
நில்லாமல், உம்
சமீபம்
அண்டவும்,
சமுகம் காணவும்,
நல் சத்தம் கேட்கவும்,
கடாட்சியும்.
2. இடையில் ஒன்றும் நில்லாமல், உம்
மெல்லிய ஓசையே
காதாரக் கேட்கவே,
வீண்சத்தம் யாவுமே
அமர்த்திடும்.
3. இடையில் ஒன்றும் நிற்கவொட்டீர்
பூலோக ஸ்நேகமோ?
தன்னிஷ்ட செய்கையோ?
சுய ப்ரயாசையோ?
நீக்கிடுவீர்.
4. இடையில் ஒன்றும் நில்லாமலே,
அவிசுவாசமோ,
அச்சம், சந்தேகமோ,
பேரொளியால், இதோ!
அகற்றுமே.
5. இடையில் ஒன்றும் நில்லாமலே
இருளை நீக்குவீர்.
ப்ரகாசங் காட்டுவீர்,
வெளிச்சம் வீசுவீர்
மா சுடரே!
6. இடையில் ஒன்றும் நில்லாமலே
நித்தம் சஞ்சரிப்பேன்,
உம்மையே நோக்குவேன்
உம்மண்டை தங்குவேன்
ஏன் மீட்பரே!
7. இடையில் ஒன்றும் நில்லாமலும்,
காப்பாற்றும் சீக்கிரம்
ப்ரபஞ்ச மயக்கம்
நீக்கி, நின் ராஜ்யம்
தோன்றச் செய்யும்.
8. இடையில் ஒன்றும் நில்லாமலும்
தங்கி, பின் மோட்சத்தில்
சமுகத் தண்டையில்
நான் நிற்கும் வரையில்,
காத்தருளும்.
Comments
Post a Comment