கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள்


18. (379)      கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள்

தோடி                    (Benedicite)                   ரூபகதாளம்

பல்லவி 
          கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள், கருத்துடன் பரமனை
          நித்தமே புகழ்ந்து துதியுங்கள்.

அனுபல்லவி
            சித்தியா யிகத்தை வகுத்து,-சக்தியால் மனுவைப் படைத்து
            முத்தியிலவனைச்சேர்க்க, இத்தரை மகவையனுப்பிய.

சரணங்கள்
1.         ஏகன் செய் சகல சிருஷ்டியே-நீர் எழுந்து பாடும்,
            தேக மில்லாத தூதரே;
            மேகவானங்கள் சேரும்-மீதுள்ள தண்ணீர் வாரும்
            வேகவான் வலிமை நீரும்-விமலனைப்புகழ்ந்து பாடும். - கர்த்

2.         சூரிய சந்திர சோதியே,-சோபித்து மின்னும்
            ஆரியவுடுக்கள் கோடியே,
            மாரியே பனியே காற்றே,-மகத்துவ நெருப்பே கொதிப்பே,
            சீரான மழையின் காலம்-சேருங் கோடைகாலம் நீரும், - கர்த்

3.         மூடிடும் பனியாலாங்கட்டி-முழங்கிப்பாடும்,
            ஆடிடுங்குளிரே பனிக்கட்டிக்
            காடெலா முறைந்த நீரே-கல் மழையான நீரே,
            தேடிடும் இரவே பகலே,-தினம் வருமொளியே இருளே - கர்த்

4.         மின்னலே மேக சேனையே,-மாபூமி நீயே
            சின்னதே சிகர மலைகளே,
            நன்னய தாவரங்கள்-நாடிடுமூற்றின் கண்கள்,
            எண்ணிடாக்கடலே, நதிகள்-ஏகமாயெழுந்து தொழுங்கள் - கர்த்

5.         மச்சமே நீந்தும் செந்துவே-மாபரனைப்போற்றும்
            உச்சமெ ழும்பறவையே,
            பட்சிக்குங் காட்டு மிருகம்,-பயமிலா நாட்டு மிருகம்
            மிச்சமாய்ப்போற்றவாரும்,-மிக மிகப்புகழ்ந்து பாடும், - கர்த்

6.         மனுக்களே மனுக்கள் சாதியே,-ஏகோவா தனையே
            வணங்கிடு மிஸ்ரவேலரே,
            தினமவரூழ்யஞ் செய்வோர்,-திகழ் பரதீசிலுய்வோர்,
            மனமதில் தாழ்மையுள்ளோர்,-மிகவெழு நெருப்பை வெல்வோர். - கர்த்

- சி. தே. ஞா.



Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு