விண் ஏகு முன் நல் வார்த்தையை


138.   Our blest Redeemer, ere He breathed       (162)

1.         விண் ஏகு முன் நல் வார்த்தையை
            நம் மீட்பர் மொழிந்தார்;
            மா தூய தேற்றரவாளனை
            வாக்களித்தார்.

2.         அவ்வாறு வல்ல ஆவியே
            சகாயராய் வந்தார்;
            மெய்ப் பக்தர் நைந்த நெஞ்சிலே
            சஞ்சரிப்பார்.

3.         ஆகாத சிந்தை தோன்றினால்
            மேலிடவே ஒட்டார்;
            வீண் பயமும் மென் சொல்லினால்
            அகற்றுவார்.

4.         நற்குணம், செய்கை, விருப்பம்
            மெய்ப்பக்தி யாவுமே
            தேவாவியாலே மாத்திரம்
            உண்டாகுமே.

5.         மா தூயநேச ஆவியே!
            சுத்தாங்கம் தாருமேன்
            அன்பாக எங்கள் நெஞ்சிலே
            வந்தாளுமேன்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே