ஜீவநேசா அருள் நாதா
131. Jesus! I
am resting. (242)
1. ஜீவநேசா!
அருள் நாதா!
உந்தன் பேரில் சாருவேன்.
திவ்ய அன்பின் ஆழம் நீளம்
கண்டு களிப்பேன்;
அருள்முகம் உற்றுப் பார்க்கப்
பரவச மாகுவேன்;
திருச்சாயலாக மறு
ரூபமடைவேன்.
பல்லவி
ஜீவ நேசா! அருள் நாதா!
உந்தன் பேரில் சாருவேன்.
திவ்ய அன்பின் ஆழம் நீளம்
கண்டு களிப்பேன்.
2. உம தன்பின் பிரவாகம்
கடல்விடப் பெரிதே.
பொழிந்தீரே! தயாநிதி!
எந்தன் பேரிலே!
நேச ரக்ஷகா! அனந்த
அருள் செல்வம் நல்கினீர்.
எனக்காக, நிறைவாக,
வாரி இறைத்தீர்.
3. யேசுவே! அன்பின் சொரூபி!
உம்மை நோக்கிப் பார்க்கையில்,
இன்ப வெள்ளம் பேரானந்தம்
எந்தன் உள்ளத்தில்
பொங்கியே, ஏராளமாக
மனோரம்யம் அடைவேன்
குறைதீர, குணமாற
த்ருப்தியாகுவேன்.
4. திருமுகத்தின் ப்ரகாசம்
என்னில் வீசச்செய்யவும்,
அதினால் பாவந்தகாரம்
பறந்தோடவும்
தயைபுரிந் தென்னைக் காரும்,
ஜோதிமா திவாகாரா!
அன்பு, அனல் மூட்டி வாரும்
கருணாகரா.
Comments
Post a Comment