18 May 2019

பல்லவிகள்-என்னை மேலும் மேலும் சேர்க்கிறீர்


ப.6.    Draw me nearer.  (66)

1.         என்னை மேலும், மேலும் சேர்க்கிறீர்
            தூய ரத்தத்தண்டையில்,
            என்னை மேலும், மேலும் சேர்க்கிறீர்
            திருப் புண்ய பாதத்தில்.

2.         என்னை மேலும், மேலும் இழுப்பீர்
          உமதன்பின் பாசத்தால்.
            என்னை மேலும், மேலும் மேலும் இழுப்பீர்
            காயப்பட்ட கரத்தால்.

3.         என்னை மேலும், மேலும் நிரப்பும்
            பரிசுத்த ஆவியால்,
            என்னை மேலும், மேலும், மேலும் நிரப்பும்
            அவர் திவ்ய பலத்தால்.

4.         உம்மை மேலும், மேலும் காட்டுவீர்
            எனதருள் நாயகா!
            உம்மை மேலும், மேலும், மேலும் காட்டுவீர்,
            வல்ல நேச ரக்ஷகா!      

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...