நாயனே எந்தன் ஆத்துமா
80. “Nearer
the cross, my heart can say” (859)
1. நாயனே! எந்தன்
ஆத்துமா
உம்மைக்கிட்டிச் சேரும்.
நாளுக்குநாள், என் ரட்சகா,
இன்னும் கிட்டிச்சேரும்;
தூய விலாவின் தீர்த்தத்தை,
பாய்ந்த மாசற்ற ரத்தத்தை,
காயமும் தோன்றும் பாதத்தை
இன்னும் கிட்டிச்சேரும்;
இன்னும் கிட்டிச்சேரும்.
2. இன்னும் என் உள்ளம் ஜெபத்தால்
உம்மைக் கிட்டிச்சேரும்;
மன்னாவை ஈயும் வேதத்தால்
இன்னும் கிட்டிச்சேரும்.
பாவத்தைத் தீர்த்த தூயரை,
ஜீவனை விட்ட மீட்பரை,
சாவினை வென்ற நாதரை
இன்னும் கிட்டிச்சேரும்.
3. நம்பிக்கையோடென் ஆத்துமா
இன்னும் உம்மை நாடும்;
உந்தனைக்காண நாயகா!
மேலும் மேலும் நாடும்;
யேசுவின் மா ப்ரசன்னத்தை
தாசரின் மோட்சானந்தத்தை
ஆசித்த ஜீவ க்ரீடத்தை
மேலும் மேலும் நாடும்;
மேலும் மேலும் நாடும்.
Comments
Post a Comment