18 May 2019

ஏராளமான கூட்டத்தார் சூழ


79.     “She only touched the hem of His garment.”     

1.         ஏராளமான கூட்டத்தார் சூழ,
            ஒர் ஸ்திரீயும் வந்தனள்;
            பேரன்பர் கிறிஸ்தின் வஸ்திரம் தொட,
            ஆரோக்கியம் பெற்றனள்.

பல்லவி

                        உன் மீட்பர் வஸ்திரம் நீயும்
                        இன்றாவலாய்த் தொட்டால்,
                        ஆரோக்கியம் ஜீவன் பெறுவாய்
                        பேரன்பர் சக்தியால்.

2.         அம்மங்கை நாணி அஞ்சி வந்தாலும்,
            இம்மானுவேல் தொட்டாள்;
            தன் மீட்பராலுண்டான மா நன்மை
            நன்குணர்ந்தே நின்றாள்.

3.         பேரன்பர் பார்த்து 'ரட்சிப்பைப் பெற்றாய்,
            நீ அஞ்சாதே' என்றார்.
            அம்மாது நெஞ்சில் மெய்ச் சமாதானம்
            இம்மானுவேல் தந்தார்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...