இயேசுவே நான் உம்மைப்
90. “Jesus I
will trust Thee.” (468)
1. யேசுவே! நான்
உம்மைப்
பற்றிக்கொள்ளுவேன்
ஏழைப் பாவியேனைச்
சொஸ்தமாக்குமேன்.
ஒப்பில்லாத நேசா!
ரத்தஞ் சிந்தினீர்.
திக்கற்றோரை மீட்க
ஜீவனும் விட்டீர்.
பல்லவி
யேசுவே! நான் உம்மை
நம்பிச் சாருவேன்,
ஏழைப் பாவியேனைச்
சொஸ்தமாக்குமேன்.
2. யேசுவே உம்மண்டை
நீசர் துஷ்டரும்
சேர்ந்தபோது, அன்பும்
மா கடாட்சமும்
காட்டி பாவம் நீக்கி,
சீருமாக்கினீர்.
பாவியைத் தள்ளாமல்
ரட்சித்தே வந்தீர்.
3. யேசுவே நான் உம்மை
நம்பியே வந்தேன்
வேத வாக்கினாலே
தைரியங் கொண்டேன்.
திவ்விய ஆவியாலும்
போதிக்கப் பெற்றேன்.
உந்தன் இன்ப சத்தம்
கேட்டானந்தித்தேன்.
4. யேசுவே! அஞ்சாமல்
நம்பி நிற்கிறேன்!
என்னை ஏற்றுக்கொண்டீர்
ஸ்தோத்ரஞ் செய்கிறேன்!
தூய ரத்தத்தோடு
திவ்ய வாக்குமே
நல் ஆதாரமாக
பற்றிக்கொண்டேனே.
Comments
Post a Comment