மெய்ப்பக்தரே நற்செய்தி கேளும்
82. “Rejoice!
rejoice! our King is coming”. (164)
1. மெய்ப்பக்தரே!
நற்செய்தி கேளும்!
மீட்பர்
வந்து ஆளுவார்,
மா நீதி சூரியோதயம் தோன்றும்;
மோட்சானந்தம் நல்குவார்.
பல்லவி
தாசர் வாஞ்சிக்கும் அவ்வின்ப
நாளில்
துன்பம் துக்கம் நீங்கிப்போம்
தேவ மைந்தன் வான மேக மீதில்
தோன்றக் கண்டு பூரிப்போம்;
மெய்ப்பக்தரே! நற்செய்தி கேளும்!
மீட்பர் வந்து ஆளுவார்!
மா நீதி சூரியோதயம் தோன்றும்,
மோட்சானந்தம் நல்குவார்.
2. கெம்பீரத்தோடு ராஜா வரக்
காத்து நின்று வாஞ்சிப்போம்;
கோடான கோடி தூதர் சூழக்
கண்டு ஆரவாரிப்போம்.
3. நாம் ஒருபோதும் தூங்கிடாமல்
நீதி செய்து ஜீவிப்போம்;
நல்நாதர் தோன்ற, பாடில்லாமல்,
நீடு வாழ்ந்து பூரிப்போம்.
Comments
Post a Comment