பாவி உந்தன் மீட்பர்


83.     “Hark! there comes a whisper”.       (344)

1.         பாவி! உந்தன் மீட்பர்,
            தேவ மைந்தனார்,
            யேசு கிறிஸ்துநாதர்
            பேசுகிறார்.

பல்லவி

            'பாடுபட்டேனே,
            மீட்பர் நான் நானே:
            கேள்; அன்பின் சத்தம் கேள்!
            கேள்! பாவி! கேள்.

2.         திக்கில்லாத உந்தன்
            துக்கம் ஆற்றுவேன்;
            துன்பம் எல்லாம் நீக்கி,
            இன்பம் ஈகுவேன்.

3.         'சஞ்சல முற்றோனே!
            தஞ்சங் கொடுப்பேன்;
            பாடு பாவம் போக்கி
            ஈடேற்றுவேன்.

4.         சேர்ந்து வந்து என்மேல்
            பாரம் போடுவாய்;
            இந்த நேரந்தானே
            சந்தோஷிப்பாய்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு