30 May 2019

அருட் பெரும் சோதி நீ அடியேனை

அனுபந்தம்:28

To Download Txt Lyrics file

 

28. (13 Y)    உன் திருவரம் தருவாயே

 

சுத்தசாவேரி                                        ஆதிதாளம்

 

                             பல்லவி

 

          அருட் பெரும் சோதி, நீ அடியேனை மீட்டே-உன்

            திருவரம் தருவாயே.

 

                             அனுபல்லவி

 

                   மருள் கொண்டு மாய்கிறேன், மானிலந் தன்னிலே

                        அருள் தந்து காப்பாயே. - அருட்

 

                             சரணங்கள்

 

1.         அல்லல் வினை யகற்றும் அரிய குமாரன் நீ,

            தொல்லுலகை ரட்சித்த கொல்கதா வீரன் நீ,

            செல்வம் அளிக்கும் நல்ல தெய்வ குபேரன் நீ,

            புல்லன் எனக்கு வாய்த்த சொல்லரிய பொக்கிஷம் நீ. - அருட்

 

2.         வன் நெஞ்சேனை இழுத்த தீன தயாளன் நீ,

            புன் செயலை அளிக்கும் இன்சொல் இறைவன் நீ,

            மன் பதையை ரட்சித்த மாண்புடை யேசு நீ,

            என் மனதுக்குகந்த அன்பின் சொரூபம் நீ. - அருட்

 

3.         இத்தரையோர்க்கு வேண்டும் சுத்த சுவிசேஷம் நீ,

            புத்துயிரை அளிக்கும் நித்திய சீவன் நீ,

            முத்தி நெறியைக் காட்டும் மூலப் பரப்பொருள் நீ,

            பித்தன் எனக்கு வாய்த்த சித்த சிகாமணி நீ. - அருட்

 

 

- ஈ. த. யே.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...