வாரும் தேற்றரவரே வாரும்


8. (114)        வாரும் தேற்றரவரே

உசேனி                                                                   ஆதிதாளம்
பல்லவி
                   வாரும், தேற்றரவரே, வாரும்;-எனைச்
                   சேரும், வினையறுத் தெனைச் சேரும்.

அனுபல்லவி
            ஆரும் மாற்றுதற் கரிதான பவம் தீரும்படி செய்யும், திறவானே. - வாரும்

சரணங்கள் 
1.         மிகவும் பாழ் நிலம் என்னுள்ளமே;-அதில்
            விதைக்கும் திரு வசனத்தையும் தள்ளவே,
            ஜகமும் மாமிச ஆசைகளும் மெள்ளவே,-செய்யும்
            சதியை அகற்றி எனையாட் கொள்ளவே,
            அக மீதா நந்தம் கொண்டுன் புகழ் விள்ளவே,-செஞ்சொல்
            அடியன் நான் உமைப் பாடி மகிழ் கொள்ளவே, - வாரும்

2.         வாடும் மனதினை ஆற்றுதற்கும்,-வேத
            மார்க்கத் தொழுகி உமைப் போற்றுதற்கும்,
            சூடென் கெட்ட குணத்தை மாற்றுதற்கும்,-சற்று
            துலங்கும் தீபத்திற் கெண்ணெய் ஊற்றுதற்கும்,
            நாடும் கதியில் கரை ஏற்றுதற்கும்,-நித்ய
            நன்மைகளினால் எனைத் தேற்றுதற்கும், - வாரும்

- தே. மு.


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு