நான் என் சொந்தமல்ல யேசு


116.   Not my own.                   (53)

1.       நான் என் சொந்தமல்ல! யேசு
                      ரத்தஞ்சிந்தி மீட்டனர்;
            பாடுபட்டு ஜீவன் தந்து,
                        என்னை ஆளாய்க் கொண்டனர்.

பல்லவி

                        சொந்தமல்ல! யேசுவே!
                        முற்றும் நான் உம் அடிமை!
                        என்தன் ஜீவன் செல்வம் யாவும்
                        நித்தம் உமக்குடைமை.

2.         நான் என் சொந்தமல்ல! என்னை
                        கிறிஸ்துவின் ஆதீனமாய்
            ஒப்புவித்து, அவர்க்கென்று
                        ஜீவிப்பேன் ஆனந்தமாய்.

3.         நான் என் சொந்தமல்ல! ஜீவன்,
                        சுகம், காலம், படைப்பேன்.
            எஜமானன் சித்தமாக
                        உபயோகஞ் செய்குவேன்.

4.         நான் என் சொந்தமல்ல, என்னை
                        ஏற்றுக்கொண்டு ரக்ஷித்தார்;
            பின்பு மோக்ஷானந்தம் தந்து
                        ஊழிகாலம் வாழ்விப்பார்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே