என் மீட்பரே என் நாதரே
121. My
glorious Victor! Prince Divine! (58)
1. என் மீட்பரே!
என் நாதரே!
சாஷ்டாங்கமாய் நற்றாளிலே,
கைகூப்பி வந்து நிற்கிறேன்.
நீர் ராஜா! நான் உம் அடியேன்!
2. ஆ! எஜமானே! கதவில்
என் காதைக் குத்துவீராகில்,
உம்மண்டை தங்கிச் சேவிப்பேன்,
ஸ்வாதீனனாக விரும்பேன்.
3. கை, காது, சிந்தை, சித்தமும்
ப்ரதிஷ்டை செய்து, முற்றிலும்
உம் வசம் ஒப்புவிக்கிறேன்,
சுயேச்சையாய் நான் ஜீவியேன்.
4. என் ஏழைக்கையில் தேவரீர்
மா அருள் செல்வம் நல்குவீர்;
உம் நேச சத்தம் நல்குவீர்;
குத்துண்ட காதும் குளிரும்.
Comments
Post a Comment