18 May 2019

இயேசுநாதர் ஐங்காயத்தை நோக்கிப்


104.   'There is life for a look at the Crucified One'     (123)

1.         யேசுநாதர் ஐங்காயத்தை நோக்கிப் பார்த்தால்
            நித்ய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்;
            பாவி! ப்ராணனைத் தந்துன்னை மீட்டவரை
            நம்பி வந்து அண்ணாந்து பார்ப்பாய்,

பல்லவி

                   பார்! பார்! நோக்கிப்பார்.
                   யேசுநாதர் ஐங்காயத்தை நோக்கியே பார்!
                   நித்ய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்.

2.         பாவப் பாரத்தைத் தாங்கின ரட்சகரால்
            உந்தன் குற்றங்கள் நீங்கினதே!
            ஜீவநாயகர் சிந்தின ரத்தத்தினால்
            பாவக்கடனும் தீர்ந்தாயிற்றே!

3.         எந்தக்ரியைகள் ஜெபங்கள் கண்ணீர்களும்
            உன்னை ரட்சிக்கமாட்டாதே! பார்!
            திரு ரத்தமே தஞ்சம் என்றோடி வந்தால்
            வல்ல மீட்பர் கடாட்சஞ் செய்வார்.

4.         ப்ராய்ச்சித்தத்தின் க்ரியைகள் முடிந்ததே
            என்று ஆண்டவர் வாக்களித்தார்;
            சர்வலோகத்தின் மீறுதல் பாவங்களைச்
            சிலுவையில் நிவிர்த்தி செய்தார்.

5.         பாவநாசனர் ஈயும் மா ரட்சிப்பையே
            இந்நேரமே பற்றிக் கொள்வாய்;
            உன் நீதியாம் யேசுவின் புண்ணியத்தால்
            பேரின்பம் பெற்றே வாழுவாய்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...