18 May 2019

திவ்ய அக்னி ஈவுக்காக


139.   Hungering for the Sacred Fire (482)

1.         திவ்ய அக்னி ஈவுக்காக
            உம்மைத்தேடி ஆவலாக
            யேசுவே! உம்மிடமாக
            அண்டினேன்.

பல்லவி

                        என்னை ஜீவ பலியாக
                        படைப்பேன் சமூலமாக,
                        உம்மால் பெலனை நிறைவாகப்
                        பெற்றிடுவேன்.

2.         பக்தி பெலனே யில்லாமல்
            சுயக்ரியை சார்ந்திராமல்,
            வேறே கதி அறியாமல்
            அண்டினேன்.

3.         நீசபாவி சேர்வதாலே
            காயப்பட்ட கரத்தாலே
            ஏற்றுக்கொள்வீர் ஆகையாலே
            அண்டினேன்.

4.         திரு ரத்தம் பேரில் சார,
            எந்தன் ஆத்மா இளைப்பாற,
            குறைதீர, மனதார
            அண்டினேன்.

5.         தயவாக நோக்கிப்பாரும்,
            மிக்க அருள் செல்வம் தாரும்,
            உமதன்பால் பாதுகாரும்,
            அண்டினேன்.

6.         நீக்குவீர் என் அவமானம்,
            நல்குவீர் இவ்வருள் தானம்,
            தாரும் திவ்ய அக்னி ஸ்நானம்,
            அண்டினேன்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...