இயேசுநாதர் என் சந்தேகம்
96. “All my
doubts give to Jesus.” (868)
1. யேசுநாதர்
என் சந்தேகம்
முற்றும்
தீரப்பண்ணினார்;
உன்னைப் புறம்பாகத் தள்ளேன்
என்று வாக்குக் கொடுத்தார்.
பல்லவி
நம்பினேனே! நம்பினேனே
திவ்விய வாக்கை நம்பினேன்!
நம்பினேனே! நம்பினேனே!
வேத வாக்கை நம்பினேன்.
2. யேசுநாதர் எந்தன் பாவம்
யாவும் நீக்கி ரட்சித்தார்;
தூய ரத்தங்கொண்டு என்னைச்
சுத்தமாக்கிக் காக்கிறார்.
3. யேசுநாதர் எந்தன் ஏக்கம்
நீக்கி ஆற்றித் தேற்றினார்
மேகம் சூழ்ந்து மூடும்போதும்
ஜோதி தோன்றச் செய்கிறார்.
4. யேசுநாதர் மெய்ச்சந்தோஷம்
தந்து பூரிப்பாக்கினார்;
வல்ல கர்த்தர் என்னில் தங்கிச்
சர்வ நன்மை நல்குவார்.
5. யேசுநாதர் பாதத்தண்டை
என்னை ஒப்புவிக்கிறேன்
ஆவி ஆத்துமா சரீரம்
முற்றும் தத்தஞ் செய்கிறேன்.
Comments
Post a Comment