18 May 2019

திவ்ய அன்பின் சத்தத்தை ரட்சகா


98.     “I am Thine, O Lord, I have heard Thy voice.”             (607)

1.         திவ்ய அன்பின் சத்தத்தை, ரட்சகா!
            கேட்டு உம்மை அண்டினேன்;
            இன்னும் கிட்டிச்சேர என் ஆண்டவா!
            ஆவல் கொண்டிதோ வந்தேன்.

பல்லவி

                        இன்னும் கிட்டக்கிட்டச் சேர்த்துக்கொள்ளுமேன்,
                        பாடுபட்ட நாயகா!
                        இன்னும் கிட்டக்கிட்டச் சேர்த்துக்கொள்ளுமேன்
                        ஜீவன் தந்த ரட்சகா!

2.         என்னை முற்றுமே இந்த நேரத்தில்
            சொந்தமாக்கிக் கொள்ளுமேன்;
            உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்
            நாடி தேடச் செய்யுமேன்.

3.         திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்
            பேரானந்தம் காண்கின்றேன்;
            உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
            மெய்ச் சந்தோஷமாகிறேன்.

4.         இன்னும் கண்டிராத பேரின்பத்தை
            விண்ணில் பெற்று வாழுவேன்;
            திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்
            அங்கே கண்டானந்திப்பேன்.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...