18 May 2019

அருள் நாதா ரட்சைசெய்து

சு.கீ:136

To Download Txt Lyrics file

 

136.   Precious Saviour! Thou hast saved me.     (201)

 

1.       அருள் நாதா! ரட்சைசெய்து

          என்னை சொந்தமாக்கினீர்;

            மாசில்லாத ரத்தத்தாலே

            சர்வ சுத்தம் பண்ணினீர்.

 

                             பல்லவி

 

                        போற்றும்! போற்றும்! அல்லேலூயா

                        போற்றும் அருள்நாதரை;

                        ரத்தத்தால் சுத்தாங்கம் செய்தார்

                        போற்றும்! போற்றும்! யேசுவை.

 

2.         பாவக்குண க்ரியை மாற்ற

            நெடுங்காலம் முயன்றேன்;

            பின்பு வீண் ப்ரயாசை யென்று

            கண்டு, உம்மை நம்பினேன்.

 

3.         நித்தம் நம்பி, மனந்தேறி

            அருள்நாதர் ரத்தத்தால்

            தூய்மையாகித் தீமை யாவும்

            ஜெயிப்பேனே அவரால்.

 

4.         ஜீவித்தாலும் மரித்தாலும்

            யேசுநாதர் தொண்டனாய்

            மகத்தான மீட்பை எங்கும்

            கூறுவேன் மா ஊக்கமாய்.

 

5.         எந்தன் ரக்ஷா பெருமானே

            பாவகுணம் மாற்றினார்,

            கறை மாசு மறுவின்றி

            பரிசுத்தஞ் செய்கிறார்.

 

6.         போற்றும்! பேரானந்தமாக,

            சர்வ சுத்தஞ் செய்கிறார்;

            போற்றும்! போற்றும்! வல்ல மீட்பர்

            தீங்கில்லாமல் காக்கிறார்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...