இரட்சகா கண்ணோக்குமேன்


129.   Saviour! more than life to me (266)

1.         ரக்ஷகா! கண்ணோக்குமேன்!
            உம்மை அண்டிப் பற்றிப் பிடித்தேன்
            கூடவைத்துக் கொள்ளுவீர்.
            திருரத்தம் நித்தம் தெளிப்பீர்.

பல்லவி

                        எந்நாள் நேரமும்
                        சுத்தமாக்கிக் கொண்டிரும்;
                        அன்பினாலே இழுப்பீர்,
                        நித்தம் கிட்டச் சேர்த்து அணைப்பீர்.

2.         மோசமின்றி தினமும்
            என்னை மெல்ல மெல்ல நடத்தும்.
            நம்பிப் பின்னே செல்லுவேன்;
            வழிவிட்டுத் தப்பித் தவறேன்.

3.         ஜீவன் உள்ளவரைக்கும்,
            மோட்சானந்தம் பெறுமளவும்,
            பற்றிக்கொண்டு வருவேன்.
            உம்மை மேலும் மேலும் நேசிப்பேன்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே