என் ஆவி ஆத்மா தேகம்
117. My spirit,
soul and body (65)
1. என் ஆவி,
ஆத்மா, தேகம்
சர்வாங்க பலியாய்;
நான்படைத் தொப்புவித்தேன்
என் மீட்பர் சொந்தமாய்.
பல்லவி
ஆம், பலிப்பீடம் பேரில்
சமஸ்தம் படைத்தேன்;
மாசற்று சுத்தமாக
நீர் என்றும் காருமேன்.
2. உம் அருள்வாக்கை நம்பி
வந்தேனே! நோக்குவீர்!
ஆ! வல்ல நேசநாதா!
நீர் முற்றும் ரக்ஷிப்பீர்.
3. சரீர அங்கம் யாவும்
போர் ஆயுதங்களாய்
ப்ரதிஷ்டை செய்தேன் பாரும்!
கையாடும் நித்தமாய்.
4. உம்மாலே அருள்நாதா!
நான் இனி ஜீவிப்பேன்;
உம் ஜீவன் சாயல் என்னில்
நீர் தோன்றச் செய்யுமேன்.
5. மாசற்ற ரத்தத்தாலும்
தேவாவியாலுமே
நீர் என்னைச் சுத்தமாக்கி
மாசின்றிக் காருமே.
Comments
Post a Comment