30 May 2019

எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா


11. (283 S)   எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா

சுருட்டி                                               சாபுதாளம்

பல்லவி
                   எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா, ஏசுநாதையா,
                   எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா.

அனுபல்லவி
            என்றன் திரு ரத்தத்தால் உகந்து நீர் கொண்ட சபை
            வந்துன் பதம் பணிந்து வந்தித்துச் செய்தவங்கள். - எங்கள்

சரணங்கள்

1.         இருள் சூழ் தொல் புவி மீது, ஏகனே,-இலங்கிடவுன்
            ஒரு சொல்லால் ஒளிவீசச் செய்ததையே;
            இருளும் அருளு நிறை எல்லா மனுடர் நெஞ்சம்
            அருள் ஒளிவீசி இன்று அத்தன் பதம் பணிய. - எங்கள்

2.         மந்தையாடு சிதறிப் போனதை-மறுகி, உயிர்
            தந்து ரட்சித்த கோனே, தாங்கையா;
            சிந்தை தவறி வழி சிதறித் திரியும் பேர்கள்
            சிந்தை திரும்பிச் சீவ பாதையில் சென்றொழுக, - எங்கள்

3.         நேசம் வைத்தாளும் நீரே மந்தையை-நெகிழ்ந்திடாமல்;
            மோசம் வராது தின முற்றுமே
            தாசர் பணிவிடைகள் தவறாது வாய்க்கும்படி,
            யேசுவே, நின்னடியார்க்கீயும் தேவாசீர்வாதம். - எங்கள்

- ச. ஜ. யே.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...