பேரன்பர் இயேசு நிற்கிறார்
86. "The
great physician now is near." (89)
1. பேரன்பர்
யேசு நிற்கிறார்,
நாம் அண்டிக் கொள்வோமே;
கடாட்சமாகப் பார்க்கிறார்,
நல் நாமம் போற்றுவோமே.
பல்லவி
விண்ணில்
மேன்மை பெற்றது;
மண்ணோர்
இன்பமாகவே
பாடிப்போற்றும்
நாமமே;
யேசு
என்னும் நாமம்.
2. உன் பாவம் யாவும் மன்னித்தேன்;
அஞ்சாதே என்கிறாரே
சந்தேகங்கொண்டு சோர்வதேன்?
மெய்ப்பாக்கியம் ஈகிறாரே.
3. நல் மீட்பர் யாவர் பேரிலும்
கடாட்சம் வைக்கிறாரே;
தம்மண்டை சிறியோரையும்
தள்ளாமல் சேர்க்கிறாரே.
4. மா மேன்மை யேசு ஸ்வாமிக்கே
நம்மால் உண்டாவதாக
ரட்சண்ய க்ரியைக்காகவே
நாம் வாழ்த்தல் செய்வோமாக.
5. ரட்சண்ய வல்ல நாமத்தால்
விசாரம் நீங்கிப்போகும்.
அவ்வின்ப நாமம் கேட்பதால்
சந்தோஷமும் உண்டாகும்.
6. ஆனந்தமாகப் பாடுவோம்,
பேராவலோடு வாரும்!
ஏகோபித்தார வாரிப்போம்,
மெய்ப்பக்தர், தாசர் யாரும்.
7. பேரின்ப மோட்ச லோகத்தில்
மாண்பாகக் கூடுவோமே;
ரட்சண்ய நாதர் பாதத்தில்
சாஷ்டாங்கம் பண்ணுவோமே.
Comments
Post a Comment