18 May 2019

உம்பேரில் நான் மேன்மேலும் சார


147.   Let me come closer to Thee, Jesus. (7)

1.         உம்பேரில் நான் மேன்மேலும் சார
            ஆட்கொள்ளும், யேசுவே!
            உம்மண்டை இன்னும் கிட்டிச் சேரச்
            சகாயம் செய்யுமே.

2.         உம் திவ்ய சௌந்தரியம் என்னில் தோன்ற
            நீர் செய்யும், யேசுவே!
            உம் நல்ல கந்தம் என்னால் வீசக்
            கடாட்சம் தாருமே.

3.         என்னை உம் ஜீவத்தண்ணீர் பாயும்
            நீரூற்று மாக்குவீர்;
            என்றும் உம் மேன்மைக் கேதுவாயும்
            ப்ரயோகஞ் செய்குவீர்.

4.         என் மனோவாக்குக்காயம், நாதா!
            வந்தாளும் முற்றிலும்;
            என் உள்ளம் சித்தம் மேலே நேசா!
            நீர் செங்கோல் செலுத்தும்.

5.         தீராத தாகத்தால், உம் பேரில்
            மா வாஞ்சை வைத்தேனே;
            நீர் காட்சியாகும் மோட்ச வீட்டில்
            என் தாகம் தீருமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...